பாஜக சார்பில் போட்டியிட சாத்வி பிரக்யா சிங்குக்கு வாய்ப்பளித்தது சரியானமுடிவுதான் என்று கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் தவறானவை. பிரக்யாசிங் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மிகச்சரியான முடிவு. குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அவர்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.

சாத்வி மற்றும் சுவாமி அஸிமானந்தா ஆகியோருக்கு எதிராக கூறப்பட்ட எந்தகுற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் கைது செய்யப்பட்டதால், மாலேகானில் குண்டுவைத்த உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர் என்றார் அவர்.

Leave a Reply