சார்க் நாடுகளின் மாநாட்டைகண்காணிக்க சிசிடிவியை அமைத்துக்கொடுத்த சீனாவுக்கு சார்க் நாடுகளையே கண்காணிக்க செயற்கைகோளையே இந்தியா அனுப்பும் என்று தெரியாமல் போனது தான் ஆச்சரியம் .இனி இலங் கை அரசு மாளிகையில் இருந்து ஒரு தங்க குண் டூசியை காண வில்லை கண்டு பிடிக்க முடியுமா என்று கேட்டால் இதோ ராஜபக்சே பல் குத்திக்கொண்டு இருக் கிறார் இது வா பாருங்கள் என்று இலங்கைக்கு இந்தியா பதில் ஸாரி படம் அனுப்பமுடியும்.

அந்தளவிற்கு நவீனத்துவம் வாய்ந்த செயற்கைகோளான ஜி-சாட் 9 ஐ அனுப்பி இலங்கை, நேபாளம், ஆப்கானி ஸ்தான் வங்காளதேசம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 6 தெற்காசிய நாடுகளின் மண்ணில் நிகழும் மாற்ற ங்களை இனி விண்ணில் இருந்து இந்தியா கண்காணிக்க உள்ளது. சுருங்க சொன்னால் இந்த 6 நாடுகளின் குடுமி இனி இந்தியாவின் கையில்தான்.

இது தாங்க மோடியின் மாஸ்டர் ராஜ தந்திரம்.சீனா லட்ச க்கணக்கான கோடிகளை கொட்டி இந்த நாடுகளில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெறும் 450 கோடி ரூபாயயை செலவழித்து இந்தியா கண்காணிக்கப்
போகிறது என்றால் ஆச்சரியம் தானே.'இந்த செயற்கை கோளை மற்ற சார்க் நாடுகள் பயன்படுத்த முடிந்தாலும், இதன் Master control எனப்படும் மொத்த கட்டுப்பாடு இந்தி யாவின் கையில்தான் இருக்கும்.

இந்த செயற்கை கோளை அனுப்[பியதன்மூலம் தெற்கா சிய நாடுகளில் நில நடுக்கம், வெள்ளம், சுனாமி உள்ளிட் ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட இருந்தால்அது தொடர் பான தகவல் களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியும் .தொலை த் தொடர்பு சேவை, தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு, மருத்துவம், கல்வி தொடர்பான தக வல்களைப் பரிமாறிக் கொள்வதும் இந்த செயற்கைக் கோளின் முக்கிய நோக்கம் என்று இந்தியா சொல்கிறது.

சுமார் 450 கோடி ரூபாயை செலவழித்து இஸ்ரோ விஞ் ஞானிகளை மூன்று வருடம் தூங்க விடாமல் பாடாய் படுத்தி மோடி இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தி பூமிக்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் சுற்ற வைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? இந்த நாடுகளில் சீனா அமைத்துள்ள விமான தளம் கடற்தளம் ஆகியவ ற்றில் சீன ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிப்பதே மோடியின் நோக்கமாகும்.

சார்க் நாடுகள் அமைப்பில் வெறும் பார் வையாளராக இருக்கும் சீனா பூடான் ஆப்கானிஸ்தானை தவிர மற்ற
நாடுகளை வளைத்து போட்டுவிட்டது.ஆனால் இந்தியா கிட்டதட்ட இதன் பாஸ் என்றே சொல்லலாம். எல்லாம் வாஜ்பாய் காலம் வரைக்கும்தான்.காங்கிரஸ் ஆட்சியில் சார்க் நாடுகள் இந்தியாவில் மன்மோகன் சிங்கை நாம் எப்படி பார்த்தோ மே அதைவிட கேவலமாக பார்த்தார்கள்

உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன். 2011 ல் மாலத் தீவில்நடந்த சார்க் தலைவர்கள் மாநாடுக்கு சீனா தான் சிசிடிவி அமைத்துக் கொடுத்தது என்றால் இந்தியாவை மாலைத்தீவு எப்படி எடை போட்டு வைத்து இருந்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.எல்லாம் மோடி வந்த பிறகு தான் மாறிப்போனது.

.பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் சார்க் நாட்டு தலைவர்க ளுக்கு மோடி பிரதமராக பதவி ஏற்கிறார் வந்து அட்டென் ட்பண்ணுங்கள் என்று அழைப்பு அல்ல சம்மன் அனுப்பப் பட்டது.எதற்கு தெரியுமா? தெற்காசியாவில் இனி இந்தி யா வின் ஆளுமை ஆரம்பம் என்று அறிவிக்கத்தான். அதன் படி 1985 ல் சார்க் நாடுகள் அமைப்பு உருவான பிற கு சார்க் மாநாடு தவிர மற்ற நிகழ்வுக்கு 7 நாட்டு தலை வர்களும் வந்தார்கள் என்றால் அது மோடியின் பதவி ஏற்புதான்.

அப்பொழுதே மோடி 7 நாட்டு தலைவர்களிடமும் சார்க் நாடுகளுக்கு என்று தனியாக ஒரு செயற்கைகோளை
இந்தியா செலுத்த விரும்புகிறது உங்கள் அபிப்பிராயம் என்ன என்று மோடி கேட்க 7 நாட்டு தலைவர்களும் யோசிக்கிறோம் பாஸ் என்று எஸ்கேப்பாகி விட்டார்கள். ஆனால் அடுத்து 2014 நவம்பரில் நேபாளத்தில் நடந்த
18 வது சார்க் மாநாட்டில் இந்தியாவின் செயற்கைகோள் திட்டத்தை விவரிக்க 7 நாட்டு தலைவர்களும் ஒகே
சொல்லிவிட்டார்கள்.

இந்தியாவை தவிர மற்ற சார்க் நாடுகளுக்கு செயற்கை கோள் அனுப்பும் வல்லமை இல்லாத காரணத்தினால்
மோடி சொன்னவுடன் ஒகே சொல்லிவிட்டார்கள் .நவாப் செரிப்பும் ஆரம்பத்தில் ஒகே சொல்லிவிட்டு ஊர் போய்
சேர்ந்து விட்டார்.அப்புறம் தான் சீன அதிபர் போன் போட் டு முட்டாளே இந்தியா சார்க் செயற்கைகோள் என்கிற பெயரில் உங்க 7 நாட்டையும் விண்ணில் இருந்து கண் காணிக்க போகிறது என்றுஎச்சரிக்க பாகிஸ்தான் பதறிப் போய் போங் கடா நீங்களும் உங்க சேட்டலைட்டும் என்று எஸ்கேப்பாகிவிட்டது.

இது மோடி எதிர்பார்த்தது தான் ஆனால் சீனா எதிர்பார்க்காதது.ஏனென்றால் பாகிஸ்தானில் குவாடர் துறைமுக ம்,பங்காளதேசில் சிட்டகாங் துறைமுகம் நேபாளத் திற்கு சீனாவில் இருந்து ரயில் பாதை இலங்கையில் ஹம் மாந்தோட்டை துறை முகம் விமான நிலையம் மியான்ம ரில் கக்கோஸ் தீவுதுறைமுகம் மாலத்தீவு ஹவன்டு து றைமுகம் தலைநகர் மாலி விமான நிலைய ம் என்று சார்க்நாடுகளின் முக்கிய இடங்களைஎல்லாம் புனர மைப்பு என்கிற பெயரில் சீனா முதலீடுசெய்து இந்தியா வுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படி சீனா லட்சக்கணக்கான கோடிகளை கொட்டி தங் கள் பிடிக்குள் வைத்து இருந்த நாடுகளை வெறும் 450
கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் கண்காணிப்பு க்குள் கொண்டு வந்த மோடியின் ராஜதந்திரம் உலகில் வேறு எந்த தலைவரிடமும் இல்லை என்பதே என்னு டைய கணிப்பு.உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங் கள் கேட்போம்..


நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply