சாலைகளின் ஓரத்தில் சட்டவிரோதமாக பார்க்செய்யப்படும் வாகனங்கள் குறித்து புகார் அளித்தால் ரூ.200 சன்மானம் வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
 
சாலைகளின் ஓரத்தில் சட்டவிரோதமாக பார்க்செய்யப்பட்டும் வாகனங்களுக்கு தற்போது ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. இதற்கு அபராதம் 1000 ரூபாய்வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். ஏற்கனவே மோடார் வாகனம் சட்டத்தில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதைத் தொடர்ந்து கடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக பார்க் செய்யப் பட்டிருக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து, புகார் அளிப்பதற்கான அரசு வலை தளத்தில் பதிவிட்டால், 200 ரூபாய் சன்மானம் அளிக்கவும் திட்ட மிட்டுள்ளது.

Tags:

Leave a Reply