ஈஷாயோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கோவைவந்திருந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலையோர செருப்புதைக்கும் தொழிலாளியிடம் செருப்புதைத்து போட்டுக்கொண்டார்.
 
அப்போது கூலியாககொடுக்க சில்லரை இல்லாமல் திண்டாடினார். டெல்லியிலிருந்து, கோவைக்கு, 12:30 மணிக்கு, விமானம் மூலம் வந்த ஸ்மிருதி இரானி, 2:30 மணிக்கு, ஈஷாயோகா மையத்தில், நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
 
அவர் போகும் வழியில்தான் தனது செருப்பு அறுந்துபோயிருந்ததை கவனிதார். எனவே, பேரூர் பகுதியில், சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளி ஒரு வரை அணுகினார் இரானி. தனதுசெருப்பை தைத்துக்கொடுக்குமாறு இரானி கேட்டுக் கொண்டார். தொழிலாளியும் செருப்பை தைத்துக் கொடுத்தார். ஆனால் அவருக்கு கொடுக்க ரூ.100 நோட்டுதான் இரானியிடம் இருந்தது. ஆனால் தொழிலாளியிடம் திருப்பித்தர சில்லரை இல்லை. எனவே, இரண்டு தையலாக போட்டுத் தருகிறேன் என கூறி, செருப்புக்கு ஸ்ட்டிராங்காக தையல் போட்டார் அந்த தொழிலாளி. இதன்பிறகு 100 நோட்டை கொடுத்துவிட்டுகிளம்பினார் இரானி.

Leave a Reply