பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்றுவெளியிட்ட சிங்கம் படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அவ்வப்போது தனதுகருத்துகளை வெளியிட்டு வருகிறார். மேலும் அரசுசார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப் படங்களையும் அவ்வப்போது பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், மரத்தின்மீது சிங்கம் ஒன்று தனியாக நின்றிருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் நேற்று மோடி வெளியிட்டுள்ளார். இந்தப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் ஜுனாகத் வனப்பகுதியில் உள்ள சரணாலயத்தில் சிங்கம் ஒன்று ஒருமரத்தின் மீது கம்பீரமாக நிற்கும் புகைப்படத்தை மோடி வெளியி ட்டார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட மோடி, ‘கம்பீரமான கிர்சிங்கம், அழகான படம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிர் வனச்சரகர் தீபக் வாகர் என்பவர் எடுத்த இந்தப் புகைப் படத்தை மோடி பதிவிட்டுள்ளார். புகைப்படக்கலையில் மோடி ஆர் வமாக இருக்கிறார். அதனால், அழகான படத்தை ட்விட்டரில் பதி விட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால், மக்களவை தேர்தலில் பாஜக.வை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒன்றுதிரண்டு களம் இறங்கி உள்ளனர். அவர்களை தனி ஆளாக நின்று சமாளிப்பேன் என்று மோடி மறை முகமாகக் கூறுவதுபோல் உள் ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

(சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் – ரஜினியின் சிவாஜி திரைப்பட வசனம்)

Leave a Reply