பல ஆண்டுகள் முன் கொல்லி
மலையில் வாழ்ந்த சித்தர் இவர்.!!

இப்போது சமாதியாகிவிட்டார்.

வியட்னாம் போரில் இந்திய தரப்பில்
ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார்.

பெயர் KS ராவ். கர்நாடகாகாரர்.

ஒரு நாள் லேசாக வயிற்று வலி எடுக்கவே ஸ்கேன் செய்துள்ளார். பார்த்தால் மூன்றாம் நிலையில் புற்று நோய் கட்டிகள் பெரிதாக மூன்று இருந்தது.

இன்னும் 15 முதல் 30 நாட்களில்
மரணம் என்று தெரிந்துவிட்டது.

இறப்பது என்று தீர்மானமென்றால் என் தாய்நாட்டில் இறக்க விரும்புகிறேன் என்றுள்ளார்.

உடனடியாக தனி விமானம் மூலம் இந்தியாவில் கொண்டு வந்து இறக்கி
விட்டது அமெரிக்க படை.

என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

வீடே இருளில் மூழ்கியது. யாரோ சொல்லப்போய் கொல்லி மலையில்
வாழும் சித்தரை பார்க்கலாம்…

எப்படியோ இறக்கப்போகிறோம், யார் மருந்து தந்தால் என்ன, தராவிட்டால் என்ன என்று எண்ணி புறப்பட்டார்.

வாய் வழியாக உணவும், நீரும் இறங்கவில்லை. வெறும் ட்ரிப்ஸ் மட்டும்தான். வயிற்றில் அவ்வளவு பெரிய கட்டி இருக்கிறதே!!!!!

மலைவரை வண்டியில் போய்விட்டு பின் முடியாமல் ஏறி இவர் இருக்கும் இடத்துக்கு போய்விட்டார்கள்.

இவரை பார்த்ததுமே ‘வா சிவா வா, உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்’ என்றுள்ளார்.

இவருக்கு ஆச்சரியம். எல்லோருக்கும் இவரை ‘ராவ்’ என்றுதான் தெரியும். சிவா என்று சிறுவயதில் அழைத்ததோடு சரி. பின், பல பத்து ஆண்டுகளாக KS ராவ்தான்.

எதுவும் பேசவில்லை யாரும். ட்ரிப்ஸ் ஏற்பாட்டை பார்த்து, ‘இதையெல்லாம் கழற்றிப்போடு, போய் குளிச்சுட்டு வா’ என்றார். செய்தாயிற்று.

ஒரு டம்பளரில் பாதி நீர் எடுத்து ஏதோ ஒரு பொடியை போட்டு, ஆற்றிக்கொண்டே அதை பார்த்து ஏதோ செய்தார்.

குடிக்க சொன்னார். குடித்தார். பல நாட்களாக தூங்கவில்லை. அன்று இரவு சரியான தூக்கம்.

மறுநாள் காலை மீண்டும் அதே பொடி போட்ட தண்ணீர். கொஞ்ச நேரத்தில் சிறுநீர் வந்தது. போனால், கன்னங்கரேல் என்று வருகிறது.

யோசித்து பாருங்கள். கருப்பாக
சிறுநீர் வந்தால் எப்படி இருக்குமென்று.

‘என்ன சாப்பிடறே’
‘நீங்க என்ன தந்தாலும் சாப்பிடறேன் சாமி’
‘கீரை கடைஞ்சு தர்றேன். சாதத்துல போட்டு சாப்பிடு’

‘சரி சாமி’ சாப்பிட்டாச்சு.

அடுத்து, மீண்டும் அந்த பொடி தண்ணீர். மறுபடியும், இரவு சரியான தூக்கம். மறுநாள் காலை மீண்டும் கருப்பு சிறுநீர்.

மலமே கழிக்கவில்லை பல நாட்களாக. அன்று போனார்.

சிறிது நேரத்தில் வயிற்றில் இருந்த வலி, பாரம், சிரமம் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருந்தது. ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.

பல நாட்கள் கழித்து அன்றுதான் பசித்தது.
‘இன்னிக்கு இட்லி சாப்பிடறியா’
‘என்ன வேணும்னாலும் தாங்க சாமி’. சாப்பிட்டாச்சு. ‘ம்ம்ம்ம்… சரி நீ போகலாம்’.
‘என்ன சாமி?’

‘உனக்கு சரியா போச்சுப்பா. நீ போகலாம்.’

ஒன்றும் பேசமுடியவில்லை. நேராக வந்தார். சோதித்து பார்த்தார். பூரண ஆரோக்கியம் என்று வந்தது.

உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் போனது. அடுத்த விமானம் வந்தது.

அங்கு பார்த்தபோதும் இவருக்கா
புற்றுநோய் என்று கூறி சிரித்தார்கள். விஷயமறிந்தவர்கள் அதிர்ந்தார்கள்,
இது எப்படி சாத்தியமென்று.

அவரிடம் என்ன மருந்து இருக்கிறதென்று கேட்டு வாங்கி வாருங்கள். மருத்துவ உலகில் புரட்சி செய்யலாம் என்றார்கள்.

வந்தார். கொல்லி மலை சென்றார்.
கேட்டார். ‘அந்த வெள்ளை கொரங்குக்கேல்லாம் தரமாட்டேன்.

அவன் காசுக்கு விப்பான்.’ என்று கூறி
விட்டு ‘இங்க இருந்து வேலை செய்’ என்று கூறிவிட்டு போய்விட்டார்.

இவரும் பாரதத்தில் தங்கி அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க தொடங்கினார். இன்னமும் மைசூருவில் உயிரோடு இருக்கிறார்.

என்னுடைய மாமாவும் அந்த ராவ் என்பவரும் பின்னாளில் நண்பர்களாக ஆனார்கள். அவர் இவரிடம் சொல்ல, இவர் என்னிடம் சொல்ல, நான் உங்களிடம் சொல்கிறேன்.

இவரது படத்தை நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள்.

நண்பர்களுக்கு பரிமாறுங்கள்.

பூஜை அறையில் இவர் படத்தை வைத்து, உங்கள் நோய்கள் பற்றி தினம் இவரோடு பேசி வாருங்கள்.

இவர் பார்த்துக்கொள்வார்.!!

இவர்பெயர் தெரியாது.

நன்றி ஆனந்த் வெங்கட் 

Tags:

Comments are closed.