பாகிஸ்தான் யூரிதாக்குதலில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு மீதான நம்பிக்கையை இந்தியா முற்றிலும் இழந்துள்ளது. ஐநா பொதுக் குழு கூட்டத்தில் இந்தியா தனது பாகிஸ்தான் மீதான அதிருப்தியை வெளியிட்டதுடன் சர்வதேசசமூகத்தில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. பலநாடுகள் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி, தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிந்துநதி நீர் பங்கீட்டு கொள்கை  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ரத்தமும் தண்ணீரும் ஒரேநேரத்தில் பாயமுடியாது என்று பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைக்கு முன்னோட்டமாக கூறினார். சிந்துநதியின் குறுக்கே கட்டப்படவேண்டிய அணைகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு சிந்துநதியில் ஒதுக்கப்பட வேண்டிய தண்ணீரை மட்டுமே வழங்குவோம் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

பாகிஸ்தான் மீது படிப்படியான தாக்குதல் நடத்தப்படும்.ராஜதந்திர முறையை கையாண்டு படிப் படியாக பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்தொடரும். இந்தகருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply