சியாச்சின் பனிச் சரிவில் இறந்த 10 வீரர்களின் குடும்பங்களுக்கு நலஉதவி வழங்கப்படும் என்று மத்திய ரசானத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி நேருமைதானத்தில் பனிச் சருக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா கொப்பத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலிசெலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ராணுவ வீரர் ஹனுமந்தப்பா நாட்டிற்காக தனது இன்னுயிரை இழந்துள்ளார். அவரது சேவையை நாடேபோற்றுகிறது. அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமே தேசத்திற்கு பெரும்இழப்பாகும். அது போன்றதொரு வீரத் திருமகனை இந்த மாநிலம் பெற்றுள்ளது பெரும்பேராகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல்கூற வார்த்தை இல்லை.

அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய, மாநில அரசுகள் தயாராக உள்ளன. அதுமட்டு மின்றி சியாச்சின் பனிச் சரிவில் இறந்த 10 வீரர்களின் குடும்பங்களுக்கு நலஉதவி வழங்கப்படும்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார் அவர். பேட்டியின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மாநில பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:

Leave a Reply