இலங்கை அதிபர் சிறிசேனா, 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். நேற்று இரவு, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது, அவருக்கு மோடி விருந்தளித்தார்.

பிறகு இருவரும் இருதரப்பு நலன் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

சிறிசேனாவிடம் பிரதமர் , தமிழக மீனவர் பிரச்சினையை எழுப்பினார். அப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் நல்லிணக்க நடவடிக் கைகளை சிறிசேனா எடுத்து வருவதாக மோடி பாராட்டுதெரிவித்தார். இதன்மூலம், இலங்கையின் அனைத்து சமூகத்தினரும் சம அந்தஸ்துடனும், கண்ணிய மாகவும் வாழ முடியும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இந்தியா நிறை வேற்றி வரும் பொருளாதார திட்டங்களின் தற்போதைய நிலைகுறித்து பிரதமர் மோடியும், அதிபர் சிறிசேனாவும் ஆலோசனை நடத்தினர். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா அளித்துவரும் உதவிக்கு சிறிசேனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இருநாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும்  இருவரும் விவாதித்தனர்.

Leave a Reply