ஆசை ஆசையாக வாங்கிய சிறுதாவூர் பங்களாவை அடித்துப்பிடுங்கிய சசிகலா கும்பலை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஆர்.கே. நகரில் களமிறங்குகிறார் இளைய ராஜாவின் சகோதரர் கங்கை அமரன். டிடிவி தினகரனை தோற்கடிக்க கட்சி தனக்கு அளித்த மிகமுக்கியமான வாய்ப்பாகவே கருதுகிறார் கங்கை அமரன். அமைதியான இடத்தில் ஓய்வெடுக்கவும், கதை எழுத பாட்டெழுத வாங்கி போடப்பட்ட பங்களாவை, 1991ல் ஜெயலலிதா முதல்வரான போது சசிகலா கும்பல் அடித்துப்பிடிங்கினர் என்று கங்கை அமரன் குற்றம் சாட்டி வந்தார்.

இப்போது அதே சசிகலா குடும்பத்தை சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்கே. நகரில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக, அதிமுக ஓபிஎஸ் அணியின்வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பாஜக வேட்பாளராக கங்கைஅமரன் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் இடைத் தேர்தல் களம் படு பரபரப் படைந்துள்ளது.

ஆசை ஆசையாக வாங்கிய சிறுதாவூர் பங்களாவை சசிகலா அபகரித்ததாக பகிரங்கமாகப்புகார் கூறியிருந்தார் கங்கை அமரன். இதனை மனதில்வைத்தே, சசி அணி சார்பில்நிற்கும் டி.டி.வி.தினகரனை வீழ்த்த அவரை களமிறக்கியுள்ளது. சசிகலா மீதுள்ள வெறுப்பைக்காட்ட அந்தத் தொகுதி மக்கள், ஒருமாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முயல்வர். அத்துடன், ஒரு புது முகத்துக்கும் வாய்ப்பளிக்க முன் வருவார்கள் என்று கணக்கு போட்டே கங்கை அமரனை களமிறக்கி யுள்ளது பாஜக.

இவர் கடந்த பல ஆண்டு காலமாக திரை உலகில் இருக்கிறார். திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், சன் டி.வி.,யில் கடந்த 5 ஆண்டுகாலமாக சன்சிங்கர் நடத்தி வருகிறார். இதனால் சிறு குழந்தைகளின் இதயங்களிலும் இடம்பிடித்தவர்.
 

Leave a Reply