மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லியில் இருந்து விமானம்மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுவாணி தண்ணீரில் கேரளாவுக்கு சிறிதளவு உரிமைகூட கிடையாது. மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்குநோக்கி செல்லும் தண்ணீரில் ஒருசொட்டு கூட தமிழகத்துக்கு தருவதற்கு கேரளா தயார் இல்லை. சிறுவாணி முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சொந்தமானது. இந்த தண்ணீர் அவர்களுக்கு தேவையும்இல்லை.

இந்தநிலையில் சிறுவாணி தண்ணீரில் உரிமைகொண்டாடுவது வம்புக்கு இழுக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது. இந்தவிவகாரத்தில் முழு விவரங்களை ஆய்வுசெய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை பாகிஸ்தானால் ஒன்றும் செய்யமுடியாது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுடன் கூடிய பொங்கல்விழா உறுதியாக நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply