சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இது வரை ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

ஜூலை 4-ம் தேதி நிலவரப்படி பொது துறை மற்றும் தனியாா்வங்கிகள் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ரூ.56,091.81 கோடிகடன் அளிக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறை வங்கிகள் ரூ.65,863.63 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து அதில் ரூ.35,576.48 கோடிகடன் அளித்து விட்டன. தனியாா் வங்கிகள் ரூ.48,638.96 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து, அதில் ரூ.20,515.70 கோடிகடன் அளித்துள்ளன.

அதிகபட்சமாக முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.20,628 கோடிகடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப்நேஷனல் வங்கி ரூ.8,689 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.3,605 கோடி கடன் பெற்றுள்ளன. இதற்கு அடுத்து தமிழ்நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் ரூ.3,871 கோடி கடன் பெற்றுள்ளன. ரூ.6,616 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

Comments are closed.