ரிசர்வ்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியபொருளாதாரம் மற்றும் தொழில்வளர்ச்சிக்கு தடையாக இருந்தார். அவரை 2ம் முறையாக  அப்பதவியில் நீட்டிக்ககூடாது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டி வந்தார். 

இந்நிலையில், ராஜன் மீது நேற்று  மற்றொரு குற்றச் சாட்டை கூறியுள்ளார் சுப்பிரமணியசாமி. ரிசர்வ்வங்கி 10 சிறு வங்கிகளுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. ஆனால் அவை  ரிசர்வ்வங்கி விதிமுறைகளின்படி தகுதிபெற்றவை அல்ல. இதில் பணமோசடி நடந்துள்ளது.
 
இந்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பாக அரசியல்வாதிகள் முன்னாள் நிதியமைச்சருக்கு நெருக்கமான அதிகாரிகள் இடையிலான தொடர்புகுறித்து  விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ.,யின் சிறப்பு புலனாய்வுகுழு அமைத்து இந்த முறைகேட்டையும், இதற்கு உடந்தையான ரகுராம் ராஜனையும்  விசாரணை செய்யவேண்டும் என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

Leave a Reply