மத்திய பிரதேசத்தின் போபால்சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போபால் சிறையில் ஷேக் முஜீப், கலீத், அகீல், மஜித், ஜாஹிர் ஹுசேன், மொகம்மத் சாலி, ஷேக் மெகபூப், அஜ்மத் ஆகிய 8 சிமிதீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் சென்னை சென்ட்ரல்ரயில் நிலைய குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள்.
 
போபால் சிறையில் நேற்று அதிகாலை சிறைக் காவலரை படுகொலை செய்து விட்டு கயிறை  போர்வையாக்கி  8 பேரும் தப்பிச் சென்றனர். 8 பேரும் போபால் புறநகர்பகுதியான இன்ந்த் கெடியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது 8 பேரும் தப்பி ஓடமுயற்சித்தனர். இதனால் 8 பேரும் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்து தப்பியபயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply