2000 ரூபாய் நோட்டை கருப்புப் பணமா பதுக்கி வைக்க மாட்டார்களா ? ///////
2000 ரூபாயை அச்சடித்துள்ள அரசு, அதன் பறிமாற்றத்தை தீவிரமாக கண்கானித்து வருகிறது. நாளை அது பறிமாற்றப்படாமல் பதுக்கி வைக்கப்படுவதாக உணர்ந்தால், அதுவும் செல்லாததாக அறிவிக்கப்படும். பின் அதை மாற்ற அடித்து பிடித்து ஓடிவரவேண்டிய நிலை எற்படும்.

ஏன் 2000 ரூபாயை அச்சடித்தார்கள் ? 1000 அல்லது 500 அடித்திருக்கலாம் அல்லவா ? ////////
மிக ரகசியமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதால், உடனடியாக இந்தியா முழுவதும் புதிய பணத்தின் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆகையால் அதிக மதிப்பு கொண்ட ரூபாயை அச்சடிப்பது அவசியப்பட்டது. இந்த 2000 ரூபாய் அச்சடிப்பு "ட்ரையல் ஏன்ட் எரர்" முறையில் பரிசோதிக்கப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுக்களில் எத்தனை அச்சடிக்கப்பட்டுள்ளது, எந்தெந்த இடங்களில் எப்படி விநியோகிக்கப் பட்டுள்ளது என்பதை அரசாங்கம் கண்கானித்து வருகிறது.

ஆனால் போதிய பணப்புழக்கம் இல்லாமல் இருக்கிறதே ? ஏன் அரசாங்கம் சரியாக திட்டமிடவில்லை ? ///////
நான் புரிந்து கொண்டவரை, பணப் புழக்கத்தை பற்றாக்குறையில் வைத்திருப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே !! அடுத்த 50 நாட்களுக்கு போதிய ரொக்கப் பணம் இல்லாமல் வைத்திருப்பதன் மூலமாகவே, கள்ள பணத்தை வைத்திருப்பவர்களை பணத்தை ரொக்கமாக மாற்ற முடியாமல் வங்கிகளில் டெப்பாசிட் செய்ய வைக்க இயலும். இதன் மூலமே கறுப்பு பணத்தை வெள்ளையாக்க இயலும். போதிய கரண்சி விநியோகம் இருக்கும் பட்சத்தில் பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும், கூலிப்படைகளை வைத்து தங்கள் பணத்தை மாற்றிவிடுவார்கள்.

இந்த திட்டத்தை இப்படி உடனடியாக அறிவித்திருக்க வேண்டுமா ? அவகாசம் கொடுத்திருக்கலாமே ? ////////
இந்த திட்டத்தின் வெற்றியே அந்த உடனடி அறிவிப்புதான். அவகாசம் கொடுத்திருந்தால் பல கோடிகளை மாற்றி இருப்பார்கள். இது உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்த ஒன்று என்றாலும் இதற்கு சம்பந்தமான பணிகள் மோடி அவர்கள் பதவியேற்றதுமே தொடங்கி விட்டது. அனைவருக்கும் வங்கி கணக்கு எனும் ஜனதன் யோஜனா, இரண்டு லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்கினால் "பேன்" கார்டு அவசியம் எனும் அறிவிப்பு, செப்டம்பர் 30க்குள் கணக்குகளை சமர்பித்து வரிகளை செலுத்துமாறு பிரதம மந்திரியே பலமுறை வேண்டுகோள் விடுத்தது என பலவற்றை சொல்லலாம்.

2000 ரூபாய் நோட்டை கள்ள நோட்டா பாகிஸ்தான்காரன் அச்சடிக்க மாட்டானா ? கேட்பவர்கள் கீழே உள்ள இந்த வீடியோவை கொஞ்சம் பார்க்கட்டும்…….
கானொளி நன்றி Goda Ganesh மற்றும் இதை தயாரித்துள்ள‌ "சலீம்"

https://www.facebook.com/goda.ganesh/videos/10206123806649123/

Leave a Reply