கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ம் தேதி அறிவிக்க பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமைமண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப் பாடுகளிலிருந்து நிவாரணம் வழங்கியுள்ளது. பிரத்தியேக விஷயங்களை தீர்மானித்த மாநில அரசுகள், சில தொழில் துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதித்துள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்துக்கு தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்,

பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் கட்காரி சில வழிகாட்டுதல்களுடன் பொதுபோக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

எவ்வாறாயினும், பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போதுசமூக தூரத்தை பராமரிப்பது மற்றும் கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முககவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவது குறித்த எச்சரிக்கை பின்பற்றபடும் எனதெரிவித்தார்.

ஆனால் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்பட வில்லை.

கொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான நாட்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலதிகநேரம் பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன்தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கட்கரி கூறினார்.

Comments are closed.