சீக்கிய சகோதர சகோதரிகளின் வீரத்திற்குசாட்சியாக “ஜாலியன் வாலாபாக்” சம்பவம் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கட்ச் நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குருநானக் தேவ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2001ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து குஜராத் கட்ச் நகர் மீண்டுள்ளதாக தெரிவித்தார். நம் வரலாற்று பொக்கிஷங்களை மற்றநாடுகளிடம் இருந்து இந்தியா மீட்டுவருவதாக தெரிவித்த அவர், சில மாதங்களுக்கு முன்பு 150க்கும் மேற்பட்ட வரலாற்று பொருட்களை இந்தியாவிடம், அமெரிக்கா திருப்பிக் கொடுத்த தாகவும் கூறியுள்ளார்.

குருகிரந்த சாஹிப்பின் வடிவங்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் சுதந்திரத்திற்காக சீக்கியர்களின் வீரபோராட்டத்தின் அடையாளம்தான் ஜாலியன் வாலாபாக் என்றும் குறிப்பிட்டார்.

Comments are closed.