அணு சக்தி கூட்டமைப்பில் இடம் பெறுவதற்கு சீன அதிபரை சந்தித்துபேச பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

‘என்எஸ்ஜி’ எனப்படும் அணு சக்தி வினியோக கூட்டமைப்பில் சேர இந்தியா விண்ணப் பித்துள்ளது. இதற்கு சீனா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அணு ஆயுத பரவல் தடைஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்க்ககூடாது என முட்டுக்கட்டை போடுகிறது. மேலும், இந்தியாவை சேர்க்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கும் அதில் இடமளிக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. வருகிற 24-ந் தேதி தென்கொரியா தலை நகர் சியோவில் அணுசக்தி வினியோக கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் நடக்கிறது.

அப்போது இக்கூட்டமைப்பில் இந்தியாவையும் உறுப்பினராக சேர்க்க மனு அளிக்கப் பட்டுள்ளது, இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் சீனா தற்போதும் எதிர்ப்புதெரிவித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளைசேர்ப்பது குறித்த விவாதம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ஹீயா சங்யிங் கூறியுள்ளார்.

எனவே எதிர்ப்பை சமாளித்து சமரசப் படுத்த இந்திய வெளியுறவு துறையின் மூத்த அதிகாரி அமன்தீப்சிங் கில் சியோல் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு தென்கொரி யாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி உதவியாக இருந்து ‘என்.எஸ்.ஜி’ அமைப்பில் இந்தியாசேரும் நடவடிக்கையை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கஜகஸ் தான் தலைநகர் தாஷ்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபரும் பங்கேற்கின்றனர்.

அப்போது ஸி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கிறார். அப்போது என்.எஸ்.ஜி அமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர சீனாவின் ஆதரவை கோர முடிவுசெய்துள்ளார். முன்னதாக அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் சேரமுடியாது என கூறிய சீனா நேற்று அதற்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன. எனவே அதுகுறித்து விவாதம் நடத்தலாம் என கூறியுள்ளது.

எனவே இந்தசந்திப்பின் மூலம் சீனாவை சம்மதிக்கசெய்ய கடைசி வாய்ப்பாக மாற்றிக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு வெளியுறவு செயளர் ஜெய் சங்கர் சியோல் செல்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply