சுதந்திரபோராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியதொகை 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.

இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியுள்ளது.  இந்தவருடம் சுதந்திரதின உரையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தினை அரசு உயர்த்திவழங்கும் என கூறினார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்குபின் பேசிய நிதி மந்திரி அருண்ஜெட்லி, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கான ஓய்வூதியம் 20 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.  இதற்கான ஒப்புதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டிற்கான 70வது சுதந்திரதின உரையில் பேசிய மோடி, சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தினை 20 சதவீதம் அளவிற்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.  அதனால் ரூ.25 ஆயிரம் பெறுபவர்கள் ரூ.30 ஆயிரம் பெறுவார்கள்.  இது அவர்களுக்கு மரியாதை அளிப்பதற்காக என்னால் முடிந்த சிறியவிசயம் என கூறினார்.

Leave a Reply