இந்தியாவின் 70வது சுதந்திரதின விழா டில்லி செங்கோட்டையில் நடந்தது. இந்தவிழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுமார் 90 நிமிடங்கள் உரையாற்றினார். இந்தவிழாவில் மத்திய அமைச்சர்கள், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அருகே அமர்ந்திருந்த அவர், பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது தூங்கிவிட்டார். இந்த காட்சிகள் டிவிக்களில் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவ துவங்கின. பலர் கெஜ்ரிவாலை கிண்டல் செய்ய துவங்கினர். செங்கோட்டையில் தாம் உரையாற்றுவதாக கெஜ்ரிவால் கற்பனைசெய்து பார்த்து கொண்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் கிண்டலாக கூறினர்.

Leave a Reply