மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில்மாதவ் தவே, மத்திய சுற்றுச்  சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு வயது 60. மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய அமைச்சராக மோடி அமைச்சரவையில் செயல்பட்டுவந்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்  தீவிரமாக நடைபெற்றபோது,  அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டுசென்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, அனில் தவே குடும்பத்துக்கு இரங்கல்தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கலில், 'அனில் மாதவ் தவேயின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நேற்று மாலைகூட அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், சுற்றுச்சுழலைக் காப்பதில் தனிக்கவனம் செலுத்தியவர்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அனில் மாதவ் தவேயின் வாழ்க்கைக் குறிப்பு

 
  • அனில் தவே 1956ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் பட்நகரில் பிறந்தார்.
  • தாய் புஷ்பா தேவி – தந்தை மாதவ் தவே.
  • இந்தூர் குஜராத் கல்லூரியில் வணிகவியலில் முதுநிலைப்பட்டம். கல்லூரிக் காலங்களிலேயே அரசியலில் ஈடுபாடு.
  • ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். 
  • நர்மதா நதி இணைப்பிற்காக போராடினார்.
  • 2009ம் ஆண்டில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்ய சபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பணியாற்றினார்.
  • 2016ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக (தனி பொறுப்பு) பொறுப்பேற்றார்
  • 2017ம் ஆண்டு மே 18ம் நாள் உடல் நலக்குறைவால் மரணம்.

Leave a Reply