பிரதமர் நரேந்திர மோடி இன்று சூரத்சென்று மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் .

மேலும், தாத்ரா நகர் ஹாவேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுநிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், அவரை வரவேற்று, சூரத்நகரில் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாஜக புடவையால் தோரணம்போல கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. சூரத்தில் 35 இடங்களில் பெரிய கட்அவுட்டுகள், மோடியின்  தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை பாராட்டி பேனர்கள், புதிய சாலைகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட பேனர்போல, இடைவிடாமல் புடவையில் பாஜக சாதனைகள், நலத்திட்டங்கள், பிரதமர் மோடியின் உருவப்படங்களை அச்சிட்டு, இதனை நிறுவியுள்ளனர்.

400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கிரண்பல்நோக்கு மருத்துவமனையை நாளை திறந்து வைக்கிறார். பின்னர் வைரத்தை பட்டைதீட்டும் ஆலை ஒன்றையும் திறந்துவைக்க உள்ளார்.

 

Leave a Reply