சூரிய ஒளியை பயன் படுத்தி, 2019ம் ஆண்டிற்குள், 48 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மாற்றுவழி மின்சார தயாரிப்பில் மத்திய அரசு, ஆர்வம்காட்டி வருகிறது.

இதற்காக சூரிய ஒளி மின் கொள்கை வெளியிடப்பட்டது. அதன்படி, 2022ம் ஆண்டிற்குள், 100 ஜிகா வாட், அதாவது, ஒரு லட்சம் மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய பா.ஜ., அரசின் ஆட்சிக்காலம் நிறைவுபெறும், 2019க்குள், 48 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதற்கு ஏற்றபடி திட்டத்தை விரைவுபடுத்த அரசு கோரியுள்ளது. இதில், 40 சதவீதம், வீடுகளில் சூரிய ஒளி தகடுகள்மூலம் தயாரிக்கவும், மீதமுள்ள, 60 சதவீதம், நடுத்தர மற்றும் 'மெகா' திட்டங்கள் மூலமும், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply