சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று யோகாசெய்தனர். மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகாநிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில், மத்தியமைச்சர் விகே.சிங், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் 1லட்சத்துக்கும் அதிகமான யோகா நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன.
 
இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் இன்று யோகா தின கொண்டாட்டங்கள் களைகட்டின. கல்லூரிகள், பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யோகா நிகழ்ச்சி களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் அரசுஅலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் இதில் பங்கேற்று யோகா செய்தனர். மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, ஆசிரி யர்களும் பெற்றோர்களும், குழந்தைகளுடன் இணைந்து யோகாபயிற்சியை யோகா செய்தனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் யோகா கொண்டா ட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டன.
 
சென்னை பெசன்ட்நகர் கடற்கரை அருகே நடைபெற்ற யோகா தினக் கொண்டா ட்டத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன், நடிகர் ஓய்ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பள்ளி, மாணவர்களும் திரளான அளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், யோகாவின் சிறப்பம்சங்கள் மற்றும் அவசியம் குறித்து மாணவர் களுக்கு எடுத்துரைக்கப் பட்டது.
 
சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற யோகாநிகழ்ச்சியில் 3000 பேர் பங்கேற்றனர். இதில் மத்திய இணையமைச்சர் விகே. சிங், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ஆகியோர் யோகாவின் சிறப்புகுறித்து வலியுறுத்தி பேசினர்.
 

Leave a Reply