மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எம்.வெங்கைய நாயுடு சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் முதலாவது மெட்ரோ சுரங்கரயில் போக்குவரத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

அதையடுத்து சென்னை தலைமை செயலகத்துக்கு செல்லும் அவர், நகர்ப்புற மேம்பாடுகுறித்து மாநில அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வும் நடத்தவுள்ளார்.

மத்திய அமைச்சர் ஒருவர் மாநில தலைமை செயலகத்தில் ஆய்வுமேற்கொள்வது இதுவே முதல்முறை என்று தமிழக தலைமைச் செயலகவட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply