தண்ட செலவுகளைக் குறைக்க மத்தியஅரசு முடிவெடுத்துள்ளதாம். அதவது கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு வீண்செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு ஒன்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் போயுள்ளதாம்.

சுற்றுப் பயணம், உணவு, ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யும் தொகையில் 20 சதவீதத்தைக் குறைக்கவேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாம். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய செலவுத் துறை, நிதித்துறைக்கும் உத்தரவு போயுள்ளதாம்.

இந்த செலவுக்குறைப்பு தொடர்பான முடிவு, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டு அமைச்சர்களுக்கு உத்தரவுகள் போயுள்ளன.

அத்தியாவசியமே இல்லாத செலவுகளுக்குத்தான் முதலில் ஆப்பு வைக்கப்படுகிறது. இதன்மூலம் நிதி இழப்பை சரிக்கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது 5 சதவீத அளவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால் நிதி சிக்கலை சமாளிக்க செலவுக் குறைப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

செலவுக் குறைப்பில் மத்திய அரசு இறங்குவது இது முதல்முறையல்ல. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதமும் இதுபோல செலவுக் குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. அப்போது அது 10 சதவீதமாக இருந்தது. இப்போது 20 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது

செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக, அரசுத் துறைகள் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகள், விழாக்கள், கருத்தரங்குகள், மாநாடுகளிலும் சிக்கணத்தை கடை பிடிக்குமாறும் அறிவுறுத்த பட்டுள்ளதாம். அதேபோல வாகனங்கள் வாங்குவது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைக் குறைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments are closed.