செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையின் கேள்வி நேரத்தின்போது செல்போன் டவரில் ஏற்படும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதில்அளித்த மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செல்போன் டவரில் ஏற்படும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது என்பது வதந்தியே என்றும், அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத இந்த வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நம் நாட்டில் உள்ள 6 உயர் நீதிமன்றங்கள் செல்போன் டவரில் ஏற்படும் கதிர் வீச்சால் எந்த பாதிப்பும் இல்லை என்று தீரப்பு வழங்கியுள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் சுட்டிக் காட்டினார். மேலும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதிலும் ஆதாரமில்லை என்று அவர் தெரிவித்தார். உலகசுகாதார நிறுவனமும் நீண்ட ஆராய்ச்சிக்கு பின், மொபைல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது.

Leave a Reply