செல்லாதநோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை நடவடிக்கை' என, நிதியமைச்சர், அருண்ஜெட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, சமூக வலைதள மான, 'பேஸ்புக்'கில் கூறியுள்ளதாவது: செல்லாதநோட்டு அறிவிப்பால், இரண்டு மாதங்களாக, வங்கிகளில் காத்திருந்து மக்கள் அடைந்த கஷ்டம் நீங்கியுள்ளது; நிலைமை சீரடைந்துள்ளது. வழக்கமான பொருளாதார நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

இந்த நடவடிக்கையால், கறுப்புபணத்தை மீட்க முடியவில்லை என, சிலர் விமர்சிக்கின்றனர்.ஆனால், இவை வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டதன் மூலம், பணத்தின் உரிமையாளர்கள் யார் என்ற விபரம்வெளிவந்து உள்ளது. இதன் மூலம், முடங்கி கிடந்தபணம் வங்கிக்கு திரும்பியுள்ளது.

வங்கியில் குவியும் பணம், மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். வங்கி வட்டிவிகிதம் குறையும். இதன் மூலம், மக்களுக்கு பயன்கிடைக்கும். முறைகேடாக வரிசெலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களை, இனிமேல் எளிதில் கண்டறிய முடியும்.

இந்த நடவடிக்கையை, வருமான வரித் துறை முடுக்கி விட்டுள்ளது. வரிவசூல் உயரும்போது, வரியின் அளவு குறையும்; இதுவும் மக்களுக்கு பயன் அளிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திவிகிதம் அதிகரிக்கும்.

நாட்டின் வளர்ச்சியை கருத்தில் வைத்தே, பொருளாதார சீர்திருத்தங்களை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கறுப்புபணத்தை மீட்பதில், உறுதியாக உள்ளோம்.

இந்த ஆண்டு முதல், ஜிஎஸ்டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி அமலுக்கு வருவதால், பெருமளவுவரி சீர்திருத்தம் நடக்கும். எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத் தங்களை எதிர்க்கின்றன; ஆனால், மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, எப்போதும் நாட்டின் வளர்ச்சியை பற்றிமட்டுமே சிந்திக்கிறார். ஆனால், காங்., துணை தலைவர் ராகுலோ, பார்லிமென்டை எப்படிமுடக்குவது என்பது குறித்து, மட்டுமே சிந்திக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply