பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்துவரும் தனது தாய் ஹூரா பென்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் தாயாரை சந்திப்பது மோடியின் வழக்கம். அதன்படி இன்று காந்திநகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாருடன் உணவு அருந்தினார். பிரதமர் வருகையையொட்டி காந்தி நகர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு இருந்தது.

Comments are closed.