கிறிஸ்துவ மக்கள் அனைவர்க்கும் பிரதமர் மோடி கிறிஸ்துவதின வாழ்த்து தெரிவித்துள்ளார். சேவை மற்றும் கருணைக்கான நாள் இது என்றும் மன் கிபாத் "மனதில்குரல்" நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


மாதந்தோறும் வானொலியில் மனதின்குரல் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் ஆற்றிய உரையில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் விதமாக நுகர்வோருக்கான 'லக்கி கிரஹக்யோஜனா' என்ற திட்டமும் சிறு வணிகர்களுக்கான 'டிகி தன் வியாபார் யோஜனா' என்ற 2 புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இந்ததிட்டங்கள் இன்று முதலே அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.


பணமில்லா மின்னணு பரிவர்த்தனை தற்போது 300 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாகவும், மின்னணு பரிவர்த்தனைக்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்துவருகிறது. மின்னணு பணப்பரி வர்த்தனையை ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அசாம் மாநில அரசை பாராட்டுகிறேன் என்ற மோடி, அடுத்த 100 நாட்களில் 2 புதிய திட்டங்களை செயல்படுத்த போவதாக மோடி தெரிவித்தார்.


ஜன்தன் வங்கி கணக்கு மூலம் 20 கோடி பேர் ரூபேகார்டு வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறையினர் தொடர்ந்து நடத்துவார்கள் என்றும், வருமான வரித் துறையின் சோதனை இத்துடன் முடியாது என்றும் கூறினார்.

கறுப்புப் பணம் முதலைகள் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கான வழி தேடி கொண்டிருக்கிறார்கள் என்றும் தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு எடுக்க தயங்காது, அந்த நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக் கின்றனர் என்றும் மோடி கூறினார்.


இன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட மோடி, இரக்க உணர்வையும், சேவை மனப்பான்மையையும் குறிக்கும் நாள் கிறிஸ்துமஸ் என்று கூறினார்.
இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பேய் பிறந்தநாள் என்பதால் அவருக்கும் தனது பிறந்த தின வாழ்த்துக்களை வானொலி உரையில் தெரிவித்துக்கொண்ட மோடி, நாட்டின் வளர்ச்சியில் வாஜ்பாயின் பங்களிப்பை தேசம் என்றைக்கும் மறக்காது என்று புகழாரம்சூட்டினார்.

Leave a Reply