குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயில் நாட்டின் முக்கியத்தலமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோம்நாத் சிவன்கோயில் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் அண்மையில் புனரமைக்கபட்டது.

இக்கோயில் அறக்கட்டளை தலைவராக குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய்படேல் பொறுப்புவகித்து வருகிறார். மேலும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் முக்கிய அறங் காவலர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கோயில் அறக் கட்டளை தலைவர் கேஷுபாய் படேல் தலைமையில் நேற்று அறங் காவலர்கள் குழுகூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, அறங்காவலர்கள் குழுவில் உள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது சோம்நாத் கோயிலை நாட்டின் முக்கியதலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , மேலும் சுற்றுலாவை வளப்படுத்தும் நோக்கில் சோம்நாத் கோயிலுடன் டையூ மற்றும் கிர்காடுகளில் சிங்கத்தை பார்வையிடுவது ஆகியவற்றை இணைக்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டார். கோயில்வளாகத்தில் கலாச்சார மையம், அரங்கு மற்றும் அருங்காட்சியக கட்டிடம் எழுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்’’ என குறிப்பிடபட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று நடந்த கூட்டத்தில் சோம்நாத்கோயில் அறக்கட்டளை தலைவராக குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய்படேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறங்காவலர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த பிரசன் வதன் மேத்தா உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக பாஜக தலைவர் அமித்ஷா நியமிக்கப்பட்டார்.

Leave a Reply