மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை ரம்யா. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியாக உள்ளார். தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பிரசாரம்செய்யும் அவர், தேர்தலில் வாக்களிக்க விரும்புவ தில்லை. வாக்களிக்க வருவதும் இல்லை. மண்டியா மக்களால் முன்பு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டவர், தற்போது மண்டியா பக்கமே வருவதில்லை. ஓட்டு போட்ட  மக்களுக்கு அவர் எதையும் செய்த தில்லை. அவருக்கு ஓட்டுபோட்ட மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர் பார்க்கவேண்டும் என்று , ‘சொந்த ஊருக்கு வா தங்கச்சி’ என எழுதி, பூ, தேங்காய், குங்குமம், வளையல் உள்ளிட்ட பூஜைபொருட்களை பார்சலில் வைத்து பெங்களூருவில் உள்ள நடிகை ரம்யாவின் வீட்டு முகவரிக்கு மண்டியா மாவட்ட பா.ஜ.க அனுப்பி வைத்துள்ளது.
 

சமூக வலைதளத்தில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் நடிகை ரம்யா, கர்நாடக சட்டசபை தேர்தலிலும், நகர உள்ளாட்சி தேர்தலிலும் வாக்களிக்க வில்லை என்பதால் பாஜக உள்ளிட்ட சிலகட்சிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.