நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அங்குள்ள பிராதான கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும்  ஷீலா தீட்சித்தை முதல்வர்வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. 
 
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருந்து தேர்தல்பிரச்சாரத்தை இன்று துவக்கினார். சாலை வழியாக 8 கி.மீட்டர்,  தனது தேர்தல் பிரச்சாரத்தை சோனியாகாந்தி மேற்கொண்டார்.இந்நிலையில் பிரச்சாரத்தின் போது நடுவழியில் அவருக்கு திடீர்காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், பிரச்சாரத்தை  பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக டெல்லி திரும்பினார். சோனியா காந்தியை வருகையை எதிர்பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் இச்சம்பவத்தால் ஏமாற்றம் அடைந்தனர். 
 
இதற்கிடையே, சோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “ வாரணாசி தேர்தல் பிரச்சாரத்தில் சோனியாகாந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அறிந்தேன். அவரது உடல் நலம் விரைவாக தேறவும் நல்ல ஆரோக்கியம்பெறவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply