காங்., முன்னாள் தலைவர் சோனியாவுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனியாவின் பிறந்த நாளை மதநல்லிணக்க நாளாக காங்.,கொண்டாடுகிறது. கடந்த ஒருவாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்., ஏற்பாடு செய்துவருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply