குஜராத் மாநிலம், கிர் – சோம்நாத் மாவட்டத்திலுள்ள சோம நாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வழிபாடுசெய்தார்.

சிவபெருமானுடன் தொடர்புடைய 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் குஜராத் சோமநாதர் ஆலயமும் அடங்கும். உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக குஜராத்துக்கு செவ்வாய்க் கிழமை வந்தார்.

இந்நிலையில்,   சோமநாதர் ஆலயத்துக்கு மோடி புதன் கிழமை சென்றார். பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, குஜராத் முன்னாள் முதல்வரும், சோமநாதர் ஆலய அறக் கட்டளையின் தலைவருமான கேசுபாய் படேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

ஆலயத்தில் மோடி சுமார் 15 நிமிடம் பூஜையில் ஈடுபட்டார். அப்போது, சிவனுக்கு அவர் அபிஷேகம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.