இந்திய கிரிக்கெட்வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திரஜடேஜா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ரிவாபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நித்யானா என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் காா்னி சேனா என்ற அமைப்பின் மகளிரணி தலைவியாக ரிவாபா நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ரிவாவா கணவர் ரவீந்திரஜடேஜாவுடன் சமீபத்தில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் ஜாம்நகா் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் விவசாயத்துறை அமைச்சர் பால்டு மற்றும் எம்பி பூணம் மாடம் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அப்போது, இவர்களது முன்னிலையில் ரிவாபா பா.ஜ.கவில் ஐக்கியமானார்.இது குறித்து ரிவாபா கூறுகையில், “பிரதமர் மோடிதான் எனக்கு மிகச்சிறந்த உந்துசக்தி. அதனால்தான் பாஜகவில் இணைந்தேன். என்னால் தனியாக எந்தமக்கள் சேவைகளையும் செய்யமுடியாது என்பதால், பாஜகவில் சேர்ந்துள்ளேன். என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான்” என்றார்

Leave a Reply