ஜம்முகாஷ்மீர் எல்லையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த முக்கியத்தளபதி சப்ஸார் அஹமது , கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டான். புர்ஹான் வானிக்குப் பிறகு, ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கியத் தலைவராக இவன் திகழ்ந்து வந்தான். இதையடுத்து, சப்ஸார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அங்கு கடும்எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.


குறிப்பாக, அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, சப்ஸார் அஹமது வீட்டுக்கு, பிரிவினைவாத தலைவரான, யாசின்மாலிக் கடந்த சில நாள்களுக்கு முன்சென்றார். இதனால், யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மோஸ்ட் வான்டட் தீவிரவாதிகள், என்று 12 பேர்கொண்ட பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதில், லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த அபுதுஜ்னா, பஷீர்வானி, ஜூனைட் மட்டோ, ஹிஸ்புல் இயக்கத்தின் ரெயாஸ் நைகோ, முகமதுயாசின், அல்தாஃப் டார்  உட்பட 12 பேர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.

Leave a Reply