பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறு தியின்படி, அவர் பதவியேற்றதும் ‘ஜலசக்தி’ எனும் நீர்வளத்துறையை உருவாக்கி, மந்திரியை நியமித்துள்ளார்.

 

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது, குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதிசெய்வதற்காக ‘ஜல சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக தனிதுறை உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மோடி மந்திரிசபை நேற்று பொறுப்பேற்ற போது, ஜல சக்தி துறை உருவாக்கப்பட்டது.

அந்த துறையின் மந்திரியாக கஜேந்திரசிங் ஷெகாவத் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தவர். தற்போது கேபினட் மந்திரியாக உயர்ந்துள்ளார்.மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையை மறு சீரமைத்து இந்த புதியதுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.