திருச்செந்தூர் பகுதி பாஜ வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க் கின்றனர். இதற்குமுன் நடுநிலையாக இருந்த வாக்காளர்கள் 25 சதவீதமாக இருந்தநிலை மாறி, இன்று தமிழகத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நடுநிலையாளர்களாக மாறி இருக்கின்றனர். இந்தவாக்காளர்கள் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் எண்ணத்தின் படி வாக்களிக்க தயாராக இருக்கிறனர்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்மீது 4 வார காலம் விசாரணை நடைபெற இருக்கிறது. எனவே அவசரப் பட்டு எடுக்கிற முடிவுகள் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவதற்கு ஆபத்தாகமுடியும் என்ற காரணத்தால், இப்போது எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டுக்குள் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய அளவுக்கு சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தனிசட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.