தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டமசோதாவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அனுப்பி வைத்தார்.


ஜல்லிக்கட்டு நடத்தகோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்தியபோராட்டத்தில் எதிரொலியாக மிருகவதை தடுப்புசட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசரசட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த தமிழக சட்ட சபை கூட்டத்தில் அவசர சட்டமானது சட்ட மசோதாவாக தாக்கல்செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டமசோதாவை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply