ஜல்லிக்கட்டு தற்போது தேசியபிரச்சனையாக மாறியுள்ளது இனியும், இது ஒரு, மாநிலம் சார்ந்த பிரச்சனையாக இருக்காது பிஜேபி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தரூண்விஜய் கூறினார்.


மதுரை செல்லும்வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் முழுவதும் கடந்த ஆறுநாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதன் மூலம், இந்தப் பிரச்சனை தேசிய அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்மூலம் ஜல்லிக்கட்டு நடத்த, நாட்டின் பிறபகுதிகளில் உள்ள இளைஞர்களின் ஆதரவு உட்பட அனைவரின் ஆதரவும் தமிழக இளைஞர்களுக்கு கிடத்துள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


 இத்தகைய பாரம்பரி்யமிக்க ஜல்லிக்கட்டு வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராடுவதால், அவர்கள் தேசியபண்பாட்டை புத்துணர்ச்சி ஆக்குவதற்கான, புதியகீதத்தை உருவாக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பிரதமர் மோடி உறுதுணையாக இருப்பார் என்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply