ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வுஏற்படுத்த மத்திய அரசு முயற்சிசெய்து வருவதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தின் கலாசாரத்தை நரேந்திரமோடி அரசு மதிக்கிறது. அமைதியாக நடக்கும் போராட்டம் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வுகாண மத்திய அரசு தீவிர முயற்சிசெய்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தாவே, அட்டர்னி ஜெனரல் முகில் ரோகத்ஹி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இதுதொடர்பாக பா.ஜ., தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன் என்றார்.

Leave a Reply