ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது மிகவும் ஏமாற்றமானது, உத்தரவை படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக் கைகளின் அடிப்படையிலும், தமிழர்களின் பாரம் பரியத்தை காத்திடும் வகையிலும் மத்திய அரசு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது , அதற்கான அரசாணையை கடந்த 7-ம் தேதி பிறப்பித்தது. இதனையடுத்து மக்கள் மகிழ்ச்சியில், போட்டியை நடத்தும்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்புதெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நலவாரியம் மற்றும் தன்னார் வலர்கள் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

விசாரித்த உச்ச நீதிமன்றம்  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் தமிழகஅரசு மற்றும் போட்டி நடத்தும் பிறமாநில அரசுக்கள் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “நீதிமன்ற தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கும்”


தமிழகத்தில் பொங்கல் பரிசுப்பொருள்கள் பலருக்கும் கிடைக்கவில்லை என புகார்கள் வருகிறது.  பொங்கல் பண்டிகைக்கு முன்னர் அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா குமரி மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த ஆய்வுமேற்கொண்டார்.

சொத்தவிளை, சங்கு துறை கடற்கரையை உலகத்தரத்தில் மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். உலக சுற்றுலா வரை படத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இடம்பெற முயற்சி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை – கன்னியா குமரி, மணியாச்சி- தூத்துக்குடி, கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை திட்டம்  ரூ. 3,600 கோடியில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம் தென்மாவட்டங்கள்  பயன்பெறும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு ஒரு முறை கூட இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு மீனவர் பிரச்னைக்கு நிரந்தரதீர்வுக்கு முழு முயற்சி எடுத்துள்ளது. அதற்கு காலஅவகாசம் தேவைப்படும். இப்பிரச்னைக்கு தேவையான நிதியை செலவிடவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக் கணக்கான படகுகளை மீட்டு கொடுத்துள்ளோம். தற்போது அங்கு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன் மீட்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார்.

Leave a Reply