வங்கதேச தலைநகர் டாக்கா வில் கொடுந்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் ‘அவாமி லீக்’ தலைவரின் மகன் ரோஹன் இம்தியாஸ், இந்திய இஸ்லாமிய மதப் பரப்புரையாளர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு தீவிர வாதத்துக்கு மாறி உள்ளதான முகநூலில் எழுதியுள்ளார். இந்த ஆதாரமே ஜாகிர்நாயக் சர்ச்சைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. ஹோலே ஆர்டிசன் பேக்கரி விடுதியில் ஜுலை ஒன்றாம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒன்பது இத்தாலியர் ஏழு ஜப்பானியர் உட்பட 22 பேர் கொல்லப் பட்டனர்.சிலர் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டும் இருந்தனர். துப்பாக்கிசூடுகளும், குண்டுவெடிப்புகளும் மரணத்தை மிக நெருக்கமாக்கி விடுகின்றன. ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியதான கருத்தும் உண்டு. இத் தாக்குதலில் இஸ்ரேல் உளவுப்படை மொசாத்தின் சதிவலை பின்னப்பட்டு உள்ளது என்றதொரு கருத்தும் உண்டு.இதில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தான் அல்லாத பிற வற்றை( the other) அறிவற்றது , இழிவானது, அழித்தொழிப்பிற்குரியது என்கிற ஜாகிர்நாயக்கின் குரலை கருத்தியல் தீவிரவாதமாகவே ( ideological terrorism ) அணுகமுடியும். இதுவே வங்கதேச படுகொலைகளை நிகழ்த்திய இயக்கவாதிகளின் செயல்வழி தீவிரவாதத்திற்கு கருத்தியல்வலுவை அளித்துள்ளதா என்பதை புரிந்து கொள்வது ஒரு உளவியல்ரீதியான பகுப்பாய்வு சார்ந்ததே. ஜாகிர்நாயக் போன்ற மரபுவழி அறிவுஜீவிகள் பன்மைச்சமூகங்களின் இருப்புக்கே உலைவைக்கும் ஒரு குறியீடாகி விடுகிறார்கள். இதை இந்துத்துவ பாசிசவாதிகள் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி மிகப்பெரிய மூலதனப் பெருக்கத்தில் கார்ப்பரேட் இஸ்லாத்தின் மிகவிரிவான சந்தையையும், நுகர்வோர்களையும் கொண்டுள்ள ஜாகிர்நாயக்கின் புலமைத்துவம் மந்தைத்தனமான வாசகர்களை உருவாக்கியுள்ளது. என்பதும் கண்கூடு. இந்தவிதமான உருவாக்கத்தைதான் தர்கா இடிப்பு அரசியல் உட்பட தமிழகத்தில் வகாபிய அறிவுஜீவி பிஜே உருவாக்கியுள்ளார் என மதிப்பிடலாம்.

மும்பையில் இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டே ஷனை உருவாக்கிய ஜாகீர் நாயக், பீஸ் டிவியை நடத்தி வருகிறார். இதன் ஒரு நிகழ்ச்சியில் நாயக் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக வேண்டும் என்பதாக பேசியுள்ளார். இப்பேச்சின் தொடர்ச்சி அனைத்து தீய சக்திகளையும் அழிப்பதற்கு எனக் கூறப்பட்டாலும் ஜாகிர் நாயக்கின் நோக்கில் இஸ்லாம் அல்லாத அனைத்தும் தீய சக்திகளாகவே போதனை செய்யப்படுகிறது. இது சாதாரண முஸ்லிம்களின் மனோநிலையில் கருத்தியல் தீவிரவாதத்தை உற்பத்தி செய்கிறது.இது குறித்த உளவியல் நுண் அரசியலை பகுத்துப்பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவின் மும்பைப்பகுதி அறிஞர் என்பதால் வங்கதேச அரசு ஜாகிர்நாயக்கின் உரைகள் தீவிரத்தை பரப்புரை செய்கிறதா என ஆய்வு செய்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்கெனவே வங்கதேச அரசு இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந் நிலையில் கருத்துச் சுதந்திரத்தின் நிலைபாடு குறித்தும் முஸ்லிம்கள் வகாபிச ஆதரவு,எதிர்ப்பு சார்ந்து இரு வேறுபட்ட கருத்துநிலைகளிலும்உரையாடல் நிகழ்கிறது.

இந்திய பாஜகஅரசின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலோடு ஜாகிர்நாயக்கின் பிரச்சினையை இணைத்து பலர் பேசிவருவதையும் பார்க்கிறோம். இந்தியாவின் வகாபிய தேவ்பந்த் சட்டப்பள்ளி அறிஞர்கள், பரேல்வி சட்டப்பள்ளி அறிஞர்கள் யாருக்கும் இஸ்லாத்தை பரப்புரை செய்வதற்கான தடை ஒன்றும் இல்லை.இந்திய அரசு ஏற்கெனவே வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி படைப்புக்களுக்கும் தடை விதித்திருப்பதை நாம் எளிதில் மறந்து விட்டோம்.

ஜாகிர்நாயக்கின் Peace TV ஒளிபரப்பை ஏற்கெனவே பிரிட்டன், அமெரிக்கா, சீனா, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடை செய்திருப்பதாக தெரிகிறது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர்.தற்போது ஜாகிர்நாயக்கின் Peace TV.ஒளிபரப்பை வங்காளதேச அரசு தடை செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக மூத்த அமைச்சர்கள், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்ட மந்திரிசபை கூட்டத்தை தலைமையேற்று நடத்திய தொழிற்துறை அமைச்சர் அமீர் ஹுசைன் இதை அறிவித்துள்ளார்.


சவுதி வகாபிசத்தின் ஊதுகுழலாகவும் ஜாகிர் நாயக் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பது பலர் அறியாதது..ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஐந்து லட்சத்தை ( 2 லட்சம் யுஎஸ் டாலர்கள் ) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியுள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும்,வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை தனது மதிப்பீடாக முன்வைக்கிறார்.

ஸாகிர் நாயக் ஒரு தீவிரவாதி என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் அவர் எந்த அடிப்படைவாத கொள்கையின் மேல் இருக்கின்றாரோ அதை போதிக்கின்றாரோ, அந்த அடிப்படைவாத வஹாபிய கொள்கை பயங்கரவாதத்தை அடைகாத்து வளர்க்க கூடியதாக இருக்கின்றது
எனவே மதவாதத்தின் அடிப்படையில், அது இந்துத்வாவானாலும் இஸ்லாமியத்துவாவானாலும் அதை ஒடுக்கப்படவே வேண்டும். இதுகள் நாணயத்தின் இரு பகுதி போலாகும்.

பாசத்தையும் நேசத்தையும் வளர்த்து சகோதரத்துவத்தை இந்தியர்கள் மத்தியில் வளர்த்த சூஃபி இஸ்லாம் தான் உண்மையான இந்திய தேசத்தின் இஸ்லாம்.

சகிப்புத்தன்மையற்ற வஹாபிய இஸ்லாத்தை இந்தியாவில் ஒரு போது அனுமதிக்க இயலாது. ஏனென்றால், பல இனங்களுடைய இந்திய திருநாட்டின் மிகப்பெரிய பன்முகத்தன்மையை அனுசரித்து போகவும் சகிப்புத்தன்மையோடு வாழவும் ஒரு போது அந்த வஹாபிய கொள்கையின் அடிப்படைவாதம் இடமளிக்காது.

சூஃபியாக்கள் என்று அழைக்கப்படகூடியவர்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு. அந்த ஞானிகள் அடக்கப்பட்டிருக்கும் தலத்தின் மீது கட்டப்பட்ட தர்ஹாக்களுக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. மானுட நேசத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்த சூஃபி மஹான்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை, இந்த வஹாபிய மூடர்கள் கப்ர் வணக்கம், விக்கிரஹங்கள் வணக்கம் என்று பேசுகின்றனர்.
https://www.facebook.com/justicekatju/posts/1245619882145222
ஸாகிர் நாயக், தனது பேச்சில், ஏன் உர்து மொழியிலுள்ள சூஃபி கவிதைகளை மேற்கோள் காட்டுவதில்லை?

ஏன் அது மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து மதவாத அடிப்படையில் ஏற்படும் பிரிவினையை தடுப்பதாலா?

அல்லது ஸாகிர் நாயக் உறுதுனையாக ஆதரவு தரும் வஹாபிய கொள்கையின் பரம எதிரிகளான சூஃபியாக்களின் சொல்லாகியதாலா?

அல்லது ஸாகிர் நாயக் உருது புலமை அறியாதவரா?

https://twitter.com/mkatju/status/751603087459090433

https://twitter.com/mkatju/status/751603087459090433

ஸாகிர் நாயக், அறிஞரை போல் நடிக்கும் அறிவியலடிப்படையற்ற மடையர், .லட்சக்கணக்கான முஸ்லிம்களும் இவரை நம்புகிறார்களே, அது தான் மிகப்பெரிய கொடுமை!

https://twitter.com/mkatju/status/751620864110624768

இந்த ஸாகிர் நாயக் ஐந்து நிமிடத்தில் 25 விஷயங்களை தவறாக சொல்கிறாரே…இதை பார்த்தாவது திருந்துங்கள்….

ஜாகிர் நாயக் பேசும் கருத்துக்கள் மீதான விமர்சனங்கள் தொடரும் போது கேட்கப்படும் கேள்விகளில் மற்றொன்று…இதே ஜாகிர் நாயக் இமாம் ஹுஸைன் அவர்கள் கர்பலா போரில் அரசியல் ஆதாயத்திற்காக பங்கேற்றார்கள் என்று அவதூறு பேசிய போதும், யஜீதை புகழ்ந்துரைத்த போதும் கண்மூடித்தனமாக அவரை பின்பற்றியது ஏன் எனவும் என்பதுதான்.

ஸாகிர் நாயக் வகாபிய தீவிரவாத்த்தின் கருத்தியல் பிரச்சாரகர் மட்டுமல்ல சிரியா, ஈராக், லிபியா என முஸ்லிம் நாடுகளில் இழைக்கப்படும், மனிதப்படுகொலைகளுக்கு ஆதரவும் அமெரிக்க ஏகாத்பத்திய சக்திகளுக்கு ஊன்றுகோலாகவும் இருந்து சவுதி வகாபிய மன்னராட்சியை தக்கவைத்துக்கொள்ளும் அரசியலுக்கு பாதுகாவலாராகவும் உருவாகிவிட்டார் என்பதையும் கவனிக்கலாம்.

இத்துடன் தாருல் உலூம் சட்டப்பள்ளியினர் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜாகிர் நாயக்குக்கு எதிரான மார்க்கத் தீர்ப்பான பத்வாக்களையும் வழங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ளலாம்.அஹ்லே சுன்னத் பிரிவினர் 2008 ஆம் ஆண்டிலேயே ஒசாமா பின்லேடன் ஆதரவு உள்ளிட்ட பல மார்க்கப்பிரச்சினைகள் சார்ந்து ஜாகிர்நாயக்கிற்கு காபிர் பத்வா என்னும் மார்க்கத்தீர்ப்பையும் வழங்கியது.
Zakir Naik declared Kafir by Ahle-Sunnat FATWA
https://tune.pk/…/zakir-naik-declared-kafir-by-ahle-sunnat%…

இந்த விவாதங்களோடு இன்னொன்றும் தெரியவருகிறது. ரமலான் புனித மாதத்தில் மதினா நகரின் இருவிடங்களில் நடந்த குண்டு வெடிப்பு, இஸ்தான்புல், பாக்தாத்,வங்கதேச கொலைவெறி அழிப்பு அரசியல் சார்ந்த வகாபிய தீவிரவாதத்திற்கு எதிராக பேசவேண்டிய முஸ்லிம்கள், அதைச் செய்யாமல் ஜாகிர்நாயக்கை ஆதரிப்போம் என பிரச்சாரம் செய்வதும், தமிழக ஓரிரு முஸ்லிம் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முஸ்லிம்கள் குறித்த வெறுப்பின் அரசியல் கொதிநிலையை அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் இவர்களால் மற்றுமொரு கேள்வி நம் முன் வைக்கப்படுகிறது..

ஜாகிர்நாயக்கின் பேச்சு தீவிரவாதத்தை தூண்டுகிறதா என்கிற விசயத்தை பரிசீலனை செய்யும் போது ஒரேயடியாக சினந்தெழுந்து கருத்து சுதந்திரத்திற்காக போராடும் போலிஅறிவுஜீவிகள் சவுதி அரேபியாவில் இஸ்லாம் தவிர்த்து பிற சமயத்தை பொதுவெளியில் பேணுவதற்கும், பேசுவதற்கும் அனுமதி இல்லாத தடையை எதிர்த்து என்றாவது குரல் எழுப்பியுள்ளார்களா..?

நன்றி ஹெச்.ஜி.ரசூல்

One response to “ஜாகிர் நாயக் மீதான மாற்றுக் கேள்விகள்..”

  1. vmvenkVM says:

    சூஃபி, ஸாகிர் நாயக்

Leave a Reply