இந்தியாவைச்சேர்ந்த முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசிவருவது கவலையளிப்பதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஜாகிர் நாயக்கின் பேச்சு எங்களுக்கு கவலை யளிக்கிறது. ஆனால், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓர்அமைச்சராக என்னால் கருத்து கூறமுடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கும், வங்கதேச த்துக்கும் இடையே நல்லுறவும், புரிந்துணர்வும் நிலவுகின்றன. நெருங்கிய ஒத்துழைப்பாலும், இணைந்துபோராடுவதன் மூலமாகவும்தான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்றார் கிரண் ரிஜிஜு.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹ இம்தியாஸ், முகநூலில் ஜாகிர் நாயக்கின் உரைகள் குறித்து பிரசாரம்செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கு அமெரிக்கா, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

One response to “ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசிவருவது கவலையளிகிறது”

  1. Admin says:

    ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கு அமெரிக்கா, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply