ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய, மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இதனைத் தெரிவித்தார். மேலும், வெகுவிரைவில் அறிக்கை தாக்கல் செய்ய அக்குழு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறிய ராஜ்நாத்சிங், ஜாட்சமூக மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு, இயல்புநிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார். 

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து கைதால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் கைவிடப் பட்டிருப்பதாக ஹரியானா உள்துறை அமைச்சர் பி.கே. தாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply