இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் ஜிஎஸ்டி. வரி விதிப்பானது பல்வேறு மத்திய, மாநில வரி விதிப்புகளுக்கு மாறாக ஒருமுனை வரிவிதிப்பாக தேசிய அளவில் ஒரே விற்பனை வரியாக விதிக்கப்படும். இது நாடுமுழுவதும் ஒரே சந்தை என்ற சூழலை உருவாக்கும். இதனால் இந்தியாவில் தொழில் புரிவது எளிதாகும் .

ஜிஎஸ்டி கவுன்சில் குழு விரைவிலேயே கூடி அனைத்து பொருள்களின் வரி மற்றும் சேவை வரியை இறுதிசெய்ய உள்ளது இதன் மூலம் ஜூலை 1-ம் தேதி முதல் எளிமையான ஒருமுனை மறைமுக வரிவிதிப்பு முறை (ஜிஎஸ்டி) அமலாகும் .

தற்போது இந்தியாவில் உள்ள வரிவிதிப்பு முறையானது குழப்பமானதாக உள்ளது. இந்தியாவில் தொழில் புரிவோர் பல்வேறு கிளைகளைக்கொண்ட வரி விதிப்பு முறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு வரிவிதிப்பு ஆணையங்களை அணுக வேண்டியுள்ளது .

இதனால் இந்தியா என்ற ஒரு மிகப்பெரிய நாட்டின் சந்தையானது பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்படும் வரி விதிப்பு முறையால் நிர்வகிக்கப்படுகிறது. புதிதாகக் கொண்டுவரப்படும் ஜிஎஸ்டி முறையானது நாடு முழுவதற்குமான ஒற்றை வரி விதிப்பு முறையாகும். இத்தகைய ஜிஎஸ்டி முறையால் பொருள்களின் விலை குறையும், சில சேவைகளுக்கு வரிவிகிதம் உயரும்.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்கு வரிவிதிப்பு அதாவது 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்புக்கு ஒப்பு கொள்ளப்பட்டது. கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் வாரம் நடைபெற உள்ளது. அப்போது ஒவ்வொரு பொருளுக்கான வரிவிதிப்பும், சேவைகளுக்கான வரி விதிப்பும் இறுதி செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இடம்பெறாத அதேசமயம் சொகுசுபொருள்கள் அதிகபட்ச வரி விதிப்புக்குள்ளாகும் .

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்குமா என்று கேள்வி எழுகிறது , “ நான் ஒரு போதும் அப்படி நினைக்கவில்லை, ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் அது மாற்றத்தின் விளைவாக தொடக்கத்தில் ஏற்பட்ட உயர்வாகத்தான் இருக்கும்,’’ .

அருண் ஜேட்லி

Leave a Reply