பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்தால், தற்போதுள்ள நிதிசீர்திருத்தங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைகளும் நிச்சயம் தொடர்ந்து நடை பெறும்

பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நிதிச் சீர்திருத்த மற்றும் அரசின் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும்தொடரும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் என்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் பெரும் எதிர்பார்ப்பில்உள்ளனர் . புதிய தொழிற் கொள்கைகளை வரப்போகும் அரசே அமல்படுத்தும்.

பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறையானது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமல்படுத்தப் பட்டது.  ஜிஎஸ்டி வரி முறை வாட் வரி முறையை விட மிக எளிமையானது, வாட்வரி முறை போல் இல்லாமல் ஒரே ஒரு வரிவிகிதம் மட்டுமே அமல்படுத்தப்படும்,

நாங்கள் மீண்டும் ஆட்சியமைத்தால் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறினார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை . கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, ஏராளமான நிதிசீர்திருத்தங்களை செய்துள்ளது. அரசின் செலவினங்களைச் சுருக்கி வருவாயை பெருக்கி நிதிப்பற்றாக்குறை இலக்கை கணிசமாக குறைத்துள்ளது. ஜிஎஸ்டியின் பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

நாங்கள் ஆட்சியில் இருந்தால் இன்னும் கூட வரிகளை குறைத்திருப்போம்  பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்தால், தற்போதுள்ள நிதி சீர்திருத்தங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைகளும் நிச்சயம் தொடர்ந்து நடைபெறும். ஜிஎஸ்டி வரிக் கொள்கைகள் குறித்த எங்களின் நிலைப்பாட்டில் குறிப்பாக இந்த இரு அம்சங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதில், நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். சர்வதேசளவில் பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழலிலும் நம் நாட்டின் பொருளாதாரம் 7 முதல் 7.5 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை குறைய விடாமலும் அதேசமயம் ஸ்திரமாக நீடிக்குமாறும் கவனமாக பார்த்து கொண்டோம். மேலும் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். கடந்த 20 மாதங்களில் ஜிஎஸ்டியில் சிமென்ட்தவிர்த்து, பெருவாரியான பொருட்கள், 28 சதவீத வரி வரம்பில் இருந்து, 18 மற்றும் 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டன.

அடுத்து சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம். வரிவருவாய் அதிகரிப்பு ஜிஎஸ்டியின் உச்சபட்ச வரியான 28 சதவிகித வரியை நீக்க, எங்களுக்கு அதிககாலம் தேவைப்படாது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு வரிவிகிதங்களை உயர்த்த வில்லை. ஒருசில வரி இனங்களில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல் வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் கூடியுள்ளது. இதனால் அரசுக்கு வரவேண்டிய வரிவருவாயும் உயர்ந்துள்ளது. வாக்காளப் பெருங்குடி மக்களே தற்போது அமலில் உள்ள வரிமுறை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியே வரவேண்டும் என்று பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். வர்த்தகர்களும் தொழில் துறையினரும் விருப்பப்படுகின்றனர்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

Tags:

Leave a Reply