இன்று ஜப்பானில் உள்ள ஒசாக்கா பகுதியில் நடைபெறுகிறது ஜி-20 உச்சி மாநாடு. அதன்தொடக்க நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினை சந்தித்து பேசியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திரமோடி.

இருநாட்டுக் கொள்கைகள், 5ஜி தொழில்நுட்பம், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி, பாதுகாப்புத்துறை தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்தியாவின்மீது அமெரிக்கா காட்டும் அன்பிற்கு நன்றிகள் என்றும் மோடி அறிவித்துள்ளார்.

மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆனபிறகு அமெரிக்க அதிபரை முதல் முறையாக சந்திக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபருடன் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து ட்வீட்செய்துள்ளார். கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் சார்பான பல்வேறு முக்கிய முடிவுகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதில் தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவ மேம்பாடு, பொருளாதார, வர்த்தக வளர்ச்சி குறித்து பேசியதாகவும் அறிவித்துள்ளார் மோடி.

Tags:

Comments are closed.