பொதுத் துறை வங்கிகள் மூலம் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி கடன் வழங்க பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை  கட்டுப் படுத்துவதற்காக ஏறக்குறைய 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் முடங்கிப் போயின.  இவற்றுக்கு புத்துயிரூட்டும் வகையில் ரூ.3 லட்சம்கோடி அவசரகால கடன் உதவி திட்டத்தைமத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாத கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் (இசிஎல்ஜிஎஸ்) ஜூன் 1-ம் தேதிமுதல் இது வரையில் ரூ. 24,260 கோடி வழங்கப் பட்டுள்ளது.

பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்காகவும் சுய சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சலுகைதிட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதில் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் பொதுத்  துறை வங்கிகள் மூலம் ரூ.24,260 கோடி இசிஎல்ஜிஎஸ் திட்டம் மூலம் அனுமதிக்கப் பட்டு அதில் ரூ.12,200.65 கோடி வழங்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.2,637 கோடி கடன்வங்கிகள் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.1,727 கோடி வழங்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.2,547 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.1,225 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.13,363 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை ரூ.7,517 கோடி வழங்கியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா ரூ.1,893 கோடி கடனுக்கு ஒப்புதல்வழங்கி ரூ.526 கோடியை இது வரை அளித்துள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,842 கோடி அளித்து ரூ.794 கோடியை வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல்வங்கி ரூ.1,772 கோடி கடனுக்கு ஒதுக்கீடுசெய்து ரூ.656 கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை 9.25 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பிணையில்லாத வகையில் அவசரகால கடன் வழங்க இது அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.41,600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியானது அடுத்த 3 நிதி ஆண்டுகளுக்கானதாகும்.

Comments are closed.